Blogger Widgets

சமீப இடுகைகள் -

♥உங்கள் விஜயின் வலைப்பூவிற்கு வருகை தந்தமைக்கு நன்றி!.. நன்றி!.. நன்றி!.. கருத்திட்டு களம் விலக தாழ்மையுடன் கேட்டுகொள்கிறேன்...♥

Friday 18 October 2013

"தற்கொலை எண்ணம் உள்ளவரா?" - எளிமையாக மாற்றிடலாம்....

 அதிகரித்து வரும் பாலீர்ப்பு காரணமான தற்கொலைகள் பற்றி சில நாட்களுக்கு முன்பு ஒரு கட்டுரை எழுதியதை மறந்திருக்க மாட்டீர்கள் என நினைக்கிறேன்... எப்போதும் பிரச்சினைகளை பற்றியே மட்டும் பேசும் நாம், அவ்வப்போது அதற்குரிய தீர்வுகள் பற்றியும் யோசித்தாக வேண்டியது கட்டாயமான ஒன்று... புற காரணிகள் பலவற்றை பற்றியும் நாம் முன்பு பேசினோம், இப்போது நமக்குள் இருக்கின்ற சில பிரச்சினைகளை பற்றியும், அதற்குரிய தீர்வுகள் பற்றியும் சுருக்கமாக பார்க்கலாம்....
தற்கொலை என்பது ஒருநாளில் நிகழ்வது இல்லை... அது பல கால மன சோர்வின் வெளிப்பாடு... மன சோர்வு பற்றி பார்க்கும் முன்பு, மனநல மருத்துவம் பற்றிய ஒரு குட்டி முன்னுரை....
நம் உடலில் சாதாரண காய்ச்சல் முதல் கொடிய புற்றுநோய் வரை ஆயிரக்கணக்கான நோய்கள் இருப்பதை நாம் அறிவோம்... உடல் ரீதியான ஒவ்வொரு பிரச்சினைகள், உபாதைகள் பற்றியும் நாம நிறைய தெரிஞ்சு வச்சிருக்கோம்... ஆனால், உடல் நலம் பற்றி எவ்வளவோ யோசிக்கும் நாம, மனநலம் பற்றி அதிகம் கவலைப்படுவதில்லை.... காரணம், மனநலம் என்றாலே “பைத்தியம், கிறுக்கு, லூசு” என்று மேலோட்டமாக நாம் பார்க்குற அணுகுமுறை.... ஆனால், உண்மை அதுவல்ல.... கிட்டத்தட்ட முன்னூறு வகையான மனநல பிரச்சினைகள் மனிதனுக்கு வரலாம் என்கிறது அறிவியல்.... ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு விதமான சிகிச்சை, வெவ்வேறு விதமான அணுகுமுறை....
“எனக்கு பத்து வருஷமா டயாபட்டிஸ்....”
“எனக்கு இதயத்துல அடைப்பு... சமீபத்துலதான் ஆஞ்சியோ பண்ணேன்...”
இப்டி உடல் நோய்களை சர்வசாதாரணமாக அலசி ஆராய்ந்து, பெருமையாக பேசும் நாம், ஒரு சின்ன மனநல பிரச்சினையை கூட நமக்கு இருப்பதாக வெளியில் சொல்ல தயங்குவது காலத்தின் கொடுமை.....
நான் மேற்சொன்ன முன்னூறு வகையான மனநல நோய்களையும் அறிவியல் இரண்டு பெரிய பிரிவுகளா பிரிச்சிருக்கு....
·        சைக்கோசிஸ் (psychosis)
·        நியூரோசிஸ் (neurosis)
அதாவது தனக்கு ஏதோ மனநலம் சார்ந்த பிரச்சினை இருக்குன்னு ஒருத்தன் நம்பி, சிகிச்சைக்கும் தன்னை உட்படுத்திக்கொள்ள முனையும் நபர்களை நியூரோசிஸ் வகைக்குள் நாம இணைக்கலாம்....
ஆனால், தனக்கு மனநலம் சார்ந்த பிரச்சினைகள் இருப்பதை ஏற்க மறுப்பார்கள் சிலர், சிகிச்சை எடுத்துக்கொள்ள சொன்னால் கூட “நானா பைத்தியம்?... நீதான் பைத்தியம்” என்று நம் மீதே வெறுப்பை உமிழ்பவர்கள் சைக்கோசிஸ் வகைக்குள் அடங்குவார்கள்... இதைத்தவிர மனநோய்கள் பட்டியலை மாபெரும் பத்து பிரிவுகளாக ICD 10 classificationஆக மனநல அறிவியல் பகுத்திருப்பதை இப்போ நாம் பேசி குழப்பிக்க வேண்டாம்...
பொதுவா ஒருபால் ஈர்ப்பு நபர்களுக்கான மனநல பிரச்சினைகளில் “மன சோர்வு” நோய்(depression) தான் பிரதானம் ..... நம் மனம் ஒரு விசித்திரமான அமைப்பு... எவ்வளவு பெரிய இழப்பானாலும், தோல்வியானாலும், பிரிவானாலும் ஆறு வார காலத்திற்குள்ளிருந்து அதிலிருந்து நாம் வெளிவந்திடுவோம்... அதுதான் இயல்பு... ஆறு வார காலத்தை தாண்டி அப்படி ஒரு இழப்பு நம்மை தொடர்ந்து பாதித்தால், அது மனநோயின் அறிகுறி என்பதை நாம் உணரவேண்டும்....
நம் பருவ வயது முதல் ஒருபால் ஈர்ப்பில் பெரும்பாலானோர் ஈடுபட்டிருப்போம்... பல வருடங்களாக ஓரினசேர்க்கையில் ஈடுபட்டிருக்கும் நாம், அதை ஒரு தவறான விஷயமாகவே கருதியிருப்போம்.... “அது தப்பு, ஆனாலும் செய்றேன்” என்ற மனநிலையே நம்மை ஆட்கொண்டிருக்கும்... “நாம் தவறு செய்றோம்”னு நம்பிக்கை நம்ம மனசில் ஆழ பதிஞ்சுடும்.... அப்படி குழப்பம், பயம், குற்றமனப்பான்மை எல்லாமும் கொஞ்சம் கொஞ்சமாக நம்மை, நம் மனதை “மன சோர்வை” நோக்கி நகர்த்திவிடுகிறது.... விளைவு இந்த “மன சோர்வு” நோயின் ஆதிக்கம் நம்மை ஆட்படுத்திவிட தொடங்குகிறது... “எனக்கு மனநல பாதிப்பா?”னு பலரால் இதை ஏத்துக்க கஷ்டமா இருக்கும்.... பெரும்பாலானவர்களுக்கு அவங்க ego defence இதை ஒப்புக்க மறுக்கும்....மன சோர்வு நோயோட அறிகுறிகள் பற்றியல்லாம் பேசி நான் மேலும் குழப்ப விரும்பல.... ஒரே கேள்வி தான் இப்போ உங்களுக்கு.... “உங்களுக்கு தற்கொலை எண்ணங்கள் இருக்கா?, நீங்க தற்கொலை முயற்சில ஈடுபட்டவங்களா?” அப்படின்னா, நீங்க நான் கீழ் சொல்லப்போகும் சிகிச்சைகளை எடுத்தே ஆகணும்.... உங்களின் அத்தகைய தற்கொலை எண்ணத்திற்கும், மன சோர்வுக்கும் எந்த காரணமாக வேண்டுமானாலும் இருக்கலாம்... அதாவது, நீண்டநாள் ஓரின சேர்க்கையின் குற்ற மனப்பான்மை, சமூகத்தை கண்டு பயம், தாழ்வு மனப்பான்மை, தொடர் புறக்கணிப்பு, காதல் தோல்வி என்று இன்னும் எத்தனையோ காரணங்களை அடுக்கிக்கொண்டே போகலாம்... இனி காரணத்தை அலசுவதைவிட, அதிலிருந்து மீள்வதை பற்றி பார்க்கலாம்...
தற்கொலை எண்ணங்கள் என்பதே கூட அந்த மனசோர்வின் அறிகுறிதான்.... தற்கொலை எண்ணங்கள் உள்ள எல்லோரும் இத்தகைய மனசோர்வின் எல்லைக்குள் வந்துவிட்டீர்கள் என்பதை உணரவேண்டும்.... இத்தகைய நபர்களுக்கு சிகிச்சை அளித்தே ஆகவேண்டும்... நான் பல காலமாக “கலந்தாய்வு” கொடுக்கப்பட வேண்டும் என்று சொல்வது உங்களுக்கு நினைவிருக்கலாம்.... ஒரு விஷயத்தை நீங்க தெளிவா புரிஞ்சுக்கணும், கலந்தாய்வு என்பது மன நோய்க்கான சிகிச்சை கிடையாது....
உங்களுக்கு இருக்கும் பிரச்சினை என்ன? அதை எந்த சிகிச்சை முறையில் தீர்க்கலாம்? என்பதை கலந்து பேசி தீர்மானிப்பதுதான் கலந்தாய்வு... இது சிகிச்சைக்கான முதல் கட்டம்தான்...
சிகிச்சையை பொருத்தவரை மூன்று வகையாக பிரிக்கலாம்....
சைக்கோ தெரப்பி (psycho therapy) – உளவியல் சிகிச்சை... நிபுணத்துவம் பெற்ற நபர்கள் மூலம் கொடுக்கப்படும் உளவியல் கலந்தாய்வு....
மருந்து மூலம் சிகிச்சை – மருந்து மாத்திரைகள் மூலம் மூளையின் வேதியல் மாற்றங்களை உண்டாக்குவது...
ECT (electro convulsion therapy) – நாம் ஷாக் சிகிச்சை என்று கேள்விப்பட்டிருப்போம்.... இது ரொம்ப சில நோய்களுக்கு மட்டும்தான் கொடுக்கப்படும், அதுவும் வலியின்றி கொடுக்கும் நடைமுறை இப்போதல்லாம் வந்துவிட்டது...
மருந்து மாத்திரைகள் மூலம் இரண்டு வாரங்களுக்குள் பெரும்பாலான மன சோர்வினை போக்கிவிடலாம்... ஈ.ஸி.டி மூலம் ஒரே நாளில் தற்கொலை எண்ணங்களை தவிடு பொடி ஆக்கிடலாம்...
நம் மனதின் குழப்பங்களை, மனதின் சோர்வை போக்க இத்தகைய சிகிச்சை தான் முறையான ஒன்று....
அதைவிடுத்து இத்தகைய நபர்களுக்கு கலந்தாய்வு கொடுப்பதாய் சொல்லி, “இங்க பாருங்க நண்பா, இதல்லாம் வெறும் பிரமை.... மனசுதான் காரணம்”னு சொல்லி மனதை தேற்ற முனைவது, அவங்களை மேலும் குழப்பத்தான் செய்யும்.... மன சோர்வு என்பது ஒரு நோய், அதற்கு தீர்வு என்பது சிகிச்சை மட்டுமே.... மாறாக, நமது அறிவுரைகளும், ஆறுதல்களும் இல்லை... முறையான உளவியல்  கலந்தாய்வு என்பது பல கட்டங்களாக நடைபெறும்.... ஒருபால் ஈர்ப்பு நபர்களை அமரவைத்து, “இங்க பாருங்க சார்... பாலீர்ப்பு என்பது சாதாரண ஒண்ணுதான்.... அறிவியல்படி ஒருபால் ஈர்ப்பு ரொம்ப இயல்பான ஒன்று....” என்று அறிவியல்படியும், ஆராய்ச்சிகள் படியும் சொல்லப்பட்ட உண்மைகளை, பாதிக்கப்பட்டவரின் மனதிற்குள் ஆழப்புதையுமாறு சொல்ல வேண்டும்... இதை அதற்குரிய நிபுணர்கள் செய்வதுதான் முறையே தவிர, எல்லோரும் செய்திட முடியாது....
நீங்க ரொம்ப பெருசா நினைக்கும் அந்த பல விஷயங்கள், மருத்துவ துறையை பொருத்தவரை ரொம்ப இயல்பான விஷயம்... நீங்கள் சாகத்துணியும் அளவிற்கான ஒரு எண்ணத்தை, இந்த அறிவியல் ஒரே வாரத்தில் உங்களுக்கு ரொம்ப சாதாரணமானதுன்னு புரிய வச்சிடும்....
ஒரு விஷயத்தை நான் மறுபடியும் ஆழமா சொல்ல விரும்புறேன்... நான் மேற்சொன்ன சிகிச்சைகள் மன சோர்வுக்கானது மட்டுமே.... உங்களின் ஒருபால் ஈர்ப்புக்கு கிடையாது.... மனநோய்க்குத்தான் சிகிச்சை உண்டு, பாலீர்ப்புக்கு கிடையாது.... அது இயற்கையே... அதனால், ஒருபால் ஈர்ப்புக்கான சிகிச்சையாக இதனை நீங்க நினைத்திட வேண்டாம்...
அதனால், தற்கொலை எண்ணங்கள் இருப்பவர்கள், கொஞ்சமும் தயங்காமல் மனநல ஆலோசனைகளை பெறுவது அவசியம்.... மனநலம் மீட்போம், உயிர்நலம் காப்போம்...

4 comments:

  1. Replies
    1. ரொம்ப நன்றி நண்பரே...

      Delete
  2. உங்களைப்போன்ற மருத்துவ எழுத்துத்தாளரால் ஒரு மனிதனின் உணர்வைப்புரிந்து மனச்சோர்வை போக்கி தெளிவுபெற வைக்க முடியும் விக்கி. நல்ல பதிவு.

    ReplyDelete
    Replies
    1. ரொம்ப நன்றி சேகர்.... உங்களைத்தான் ரொம்பநாளாக பார்க்க முடியல.....

      Delete